அடிக்க வேண்டிய டார்கெட் எவ்ளோ...? யாருக்கு தெரியும்...? 'அவங்க பவுலிங் போடுறாங்க...' 'நாம பேட்டிங் பண்றோம்...' - டார்கெட் தெரியாமல் களமிறங்கிய வங்கதேச வீரர்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அடிக்க வேண்டிய டார்கெட் என்னவென்று தெரியாமல் வங்கதேச தொடக்க வீரர்கள் களமிறங்கினர்.

நேபியரில் நடைபெறும் இரண்டாவது டி-20 போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி மழை பெய்த காரணத்தினால் குறைவான ஓவர்களிலேயே விளையாட்டை முடித்துக் கொண்டது.
இந்த நிலையில், நியுசிலாந்து அணி, 17.5 ஓவர்களில் 5 விக்கெட் போய் 173 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 31 பந்துகளில் 58 ரன்களும் டெரில் மிட்செல் 16 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் விளையாடினார்கள். இந்த நிலையில் திடீரென மழை பெய்தது. மழையில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸ் 17.5 ஓவர்களுடன் முடிக்கப்பட்டது.
இதனையடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அப்போது அவர்கள் விளையாட வேண்டிய டார்கெட் அறிவிக்கப்படாமல் இருந்தது. மழை காரணமாக DLS முறையில் டார்கெட் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் டார்கெட்டை அறிவிக்காத நிலையில் வங்கதேச வீரர்கள் இலக்கு தெரியாமல் களத்தில் இறங்கி விளையாட தொடங்கிவிட்டார்கள்.
1.3 ஓவர்கள் வரை தொடக்க வீரர்களான லிடன் தாஸும் முகமது நைமும் விளையாடினார்கள். எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டதால் வங்கதேச மேலாளர், போட்டி நடுவர் ஜெஃப் குரோவின் அறைக்குச் சென்று புகார் தெரிவித்தனர். இதன்காரணமாக போட்டி உடனே நிறுத்தப்பட்டது. பின்னர் DLS முறையில் கணக்கிட்டு வங்கதேச அணி வெற்றி பெற 170 ரன்கள் தேவை என்பதை குரோவ் அறிவித்தார். அதன் பிறகு மேட்ச் மறுபடியும் தொடங்கியது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
