‘ஜானி பேர்ஸ்டோவால் சூடான சுந்தர்’!.. வேகமாக ஓடி வந்து சமாதானப்படுத்திய அம்பயர்.. 14-வது ஓவரில் என்ன நடந்தது..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ்-க்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஜோப்ரா ஆர்சர் 3 விக்கெட்டுகளும், ஆதில் ரஷித், மார்க் வுட், கிறிஸ் ஜோர்டன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவுடன், தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் கோபமாக வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
— Maqbool (@im_maqbool) March 12, 2021
அதில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸின் போது 14-வது ஓவரை வாசிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மாலன் சுந்தருக்கு எளிய கேட்சை ஒன்றை கொடுத்தார். அதனை பிடிக்கும் முயற்சியில் வாசிங்டன் சுந்தர் ஈடுபட்டபோது எதிர்முனையில் இருந்த ஜானி பேர்ஸ்டோவின் ஹெல்மெட்டில் எதிர்பாராதவிதமாக பந்து பட்டுச் சென்றது. இதனால் அதிருப்தியடைந்த வாசிங்டன் சுந்தர், ஜானி பேர்ஸ்டோவை நோக்கி கோபமாக ஏதோ பேச, இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. உடனே வேகமாக வந்த அம்பயர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினார்.

மற்ற செய்திகள்
