யாரு சாமி இவரு?.. டி20 கிரிக்கெட்ல கிறிஸ் கெயிலையே மிஞ்சிட்டாரு!.. அசுரத்தனமான ஆட்டத்தால் இரட்டை சதம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 போட்டிகளில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து இந்திய வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

உலகளவில் டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகள் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் காட்டும் அதிரடி காரணமாக போட்டி விறுவிறுப்பாக நடைபெறும்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பவுலர்கள், ஸ்டாக் பால், கேரம் பால், பவுன்சர், டூஸ்ரா, ஸ்விங், ஸ்பின் என பல வகையான பந்துவீச்சையும் பயன்படுத்துவார்கள். எனினும், அவற்றை எதிர்கொண்டு குறுகிய காலத்தில் பேட்ஸ்மேன்களும் அதிரடி காட்ட தவறுவதில்லை. இதனால் டி20 கிரிக்கெட்டில் தற்போது வரை வீரர்கள் ஒரே போட்டியில் சதங்களும், 150 ரன்களும் கூட அடித்து ஆச்சரியப்படுத்துகின்றனர்.
இந்நிலையில், அவற்றை எல்லாம் தாண்டி டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் சுபாத் பஹாடி. டெல்லியை சேர்ந்த இவர் கிளப் அளவிலான டி20 போட்டியில் பங்கேற்றுள்ளார். அதில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அவர் 79 பந்துகளில் 205 ரன்களை விளாசியுள்ளார். இதில் 17 சிக்ஸர்களும், 17 பவுண்டரிகளும் அடங்கும். முதலில் தனது சதத்தை அடிக்க 17 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்ட பஹாடி, பின்னர் 79 பந்துகளில் இரட்டை சதம் கடந்தார்.
அதிரடியாக விளையாடிய பஹாடி-ன் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 256 ரன்களை குவித்தது. இந்த ஸ்கோரில் 80 சதவீத ரன்கள் பஹாடி அடித்தது ஆகும். அணியின் சக வீரர்களான சச்சின் பஹாடி 25 ரன்களும், விக்ஸ் பஹாடி 6 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோருக்கு உதவினர்.
டி20 கிரிக்கெட்டில் சர்வதேச வீரர்கள் கூட இதுவரை இரட்டை சதத்தை கடந்ததில்லை. அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 175* ரன்களை விளாசினார். இந்த சாதனையை ஐபிஎல் தொடரின் போது தான் அவர் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபிஞ்ச் 172 ரன்களை விளாசியுள்ளார்.

மற்ற செய்திகள்
