VIDEO: ஒரு ஸ்டெம்ப் வச்சு 'எப்படி' கரெக்ட்டா அடிக்குறாரு பாருங்க...! 'தல'ன்னா சும்மாவா...! - மேட்ச் தொடங்குறதுக்கு முன்னாடி 'தோனி' கொடுத்த பயிற்சி வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி-20 உலக கோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில் ரிஷப் பண்டிற்கு தோனி பயிற்சி கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டி 20 போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி, பும்ராஹ் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ரிஷப் பண்டிற்கு மைதானத்தில் பயிற்சி வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
— pant shirt fc (@pant_fc) October 20, 2021

மற்ற செய்திகள்
