'ஏன் சார் உங்கள இந்திய அணி டி20ல எடுக்கல'?.. ரசிகர்களின் மனங்களை கலங்கடித்த ஷிகர் தவானின் உருக்கமான பதில்!.. நெகிழ்ச்சி சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான், டி20 போட்டிகளில் அவரை தேர்ந்தெடுக்காதது குறித்து உருக்கமான பதிலை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நேற்றைய 3வது போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ஷிகர்தவான் 67 ரன்களை அடித்திருந்தார். முதல் போட்டியிலும் 98 ரன்களை அடித்து சதத்தை நூலிழையில் தவறவிட்டார். தனக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை ஒன்றிரண்டு தவிர்த்து மற்றவற்றை சிறப்பாக பயன்படுத்திக் கொள்பவர் ஷிகர் தவான்.
இந்நிலையில், தான் எப்போதும் பள்ளத்தில் இருப்பதாகவும், தன்னுடைய வாய்ப்பு கிடைத்தால் அதை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு பயன்படுத்துவதாகவும் ஷிகர் தெரிவித்துள்ளார். இவ்வாறு விளையாடுவது சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை சர்வதேச போட்டிகளுக்காக தயாராக வைத்துக் கொள்வதாகவும் ஷிகர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது சிறப்பான பயிற்சியாக தனக்கு அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஒருநாள் தொடரில் ஷிகர் 171 ரன்களை குவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்சிற்காக பேசிய அவர், உள்ளூர் போட்டிகளில் விளையாடி பெற்ற பயிற்சியை கொண்டே தான் தற்போது ஒருநாள் தொடரையும் சிறப்பாக எதிர்கொண்டதாகவும் கூறினார். மேலும், பவுன்ஸ் டிராக்குகளில் விளையாடுவதை தான் மிகவும் மகிழ்ச்சியாக எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
