இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கல்!.. 'இத' சரி பண்ணிட்டா போதும்... டி20 உலக கோப்பை நமக்கு தான்!.. கோலி - பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Apr 08, 2021 03:41 PM

டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு மூன்று முக்கியமான சிக்கல்கள் உள்ளன.

t20 world cup team india issues to be solved kohli bcci

7வது உலகக் கோப்பை டி20 தொடர் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை டி20 தொடருக்காக இப்போதிலிருந்தே அனைத்து அணிகளும் தங்கள் அணிகளை தயார்படுத்தி வருகின்றனர். இந்திய அணியும் அதற்கு விதிவிலக்கல்ல. எந்தெந்த வீரர்களை இறுதி பட்டியலில் சேர்ப்பது என்கிற திட்டத்தை வகுத்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், இந்திய அணி உலக கோப்பை டி20 தொடருக்கு முன்பாக மூன்று முக்கிய சிக்கல்களை தீர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே இந்தியா சிக்கலில் இருந்து தப்பித்து கோப்பையை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. அப்படி கோலி சரிசெய்ய வேண்டிய 3 முக்கியமான சிக்கல்களை பற்றி பார்ப்போம்.

ஸ்பின் அட்டாக் :

ஸ்பின்னை பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணிக்கு மிக முக்கிய வீரர்களாக சஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருந்து வந்தனர். ஆனால் சமீபகாலங்களாக அவர்கள் இருவரது பங்களிப்பும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. எனவே, எந்த ஸ்பின் பவுலரை தேர்வு செய்வது என்று இந்தியா அணி யோசித்து வருகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல் இவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச்சிறப்பாக பங்களித்தனர். வருகிற ஐபிஎல் தொடர்களில் இவர்கள் இருவரும் சரியாக பங்களிக்கும் பட்சத்தில் யாரேனும் ஒருவரை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல இளம் வீரர்கள் ராகுல் திவாட்டியா மற்றும் ராகுல் சாஹார் இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரின் பர்பாமன்ஸ் பொறுத்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார். ஸ்பின் ஆல்ரவுண்டர் பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு கடும் போட்டி எழும்.

ஓபனிங் பேட்ஸ்மேன்கள் :

ஓபனிங்கை பொறுத்தவரை ரோகித் சர்மா ஒரு வீரராக எப்போதும் இறங்குவார். மற்றொரு முனையில் தவானை இறக்குவதா அல்லது கேஎல் ராகுல் இறக்குவதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இவர்கள் இருவரும் சரியாக பங்களிக்காததால் விராட் கோலி ரோகித் சர்மாவுடன் ஓபனிங் இறங்கினார்.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி ஓபனில் 90 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்கிறது. மேலும் விராட் கோலி ரோகித் சர்மாவுடன் இறங்க நான் ஆவலாக உள்ளேன் என்றும் அனைத்து தேவைப்படும் நேரங்களில் நான் அப்படி ஓபனிங் ஆடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். எனவே, ரோகித் சர்மாவுடன் யார் ஓப்பனிங் இறங்க போகிறார்கள் என்ற கேள்வி இப்போது வரை இருந்து வருகிறது.

மிடில் ஆர்டர் :

இளம் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷன் கிஷன் நன்றாக ஆடி வரும் நிலையில் சீனியர் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா மறுமுனையில் நன்றாக ஆடி வரும் நிலையில், இவர்களை முறையே எந்தெந்த இடத்தில் வைப்பது என்ற குழப்பம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. ரவிந்திர ஜடேஜா மீண்டு வந்தால் அவரை எந்த இடத்தில் ஆட வைப்பது என்று மேலும் குழப்பத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

எனவே, ஒருபக்கம் இவர்கள் அனைவரும் நன்றாக ஆடி வந்தாலும் வீரர்களை தொடர்ச்சியாக மற்றும் நிலையாக எந்தெந்த இடங்களில் ஆட வைப்பது என்கிற கேள்வி இந்திய அணியிடம் தற்போது வரை இருந்து வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. T20 world cup team india issues to be solved kohli bcci | Sports News.