"நம்ம ஆட்டம் 'ஆரம்பம்' ஆயிடுச்சு..." சொன்னபடியே செய்து காட்டி... 'செகண்ட்' ரவுண்டுக்கு தயாராகும் 'ஸ்ரீசாந்த்'??... "வேற 'லெவல்' பாஸ் நீங்க"!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பல ஆண்டுகள் கிரிக்கெட் ஆட தடை செய்யப்பட்டிருந்தார்.

இந்த தடைக் காலம் முடிந்து மீண்டும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்த ஸ்ரீசாந்த், சையது முஷ்டாக் அலி தொடரில் கேரளா அணிக்காக ஆடினார். அத்துடன் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக தனது பெயரையும் அவர் பதிவு செய்திருந்தார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதே தனது நோக்கம் என ஸ்ரீசாந்த் கூறியிருந்தார்.
ஆனால், ஐபிஎல் ஏலத்தில் பங்கு கொள்ள ஸ்ரீசாந்த் தேர்வாகவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்தாலும் ஸ்ரீசாந்த் மனம் தளரவில்லை. ஐபிஎல் ஏலத்திற்காக அவர் பெயர் பதிவாகாமல் போனதும், வீடியோ ஒன்றை வெளியிட்ட ஸ்ரீசாந்த், 'எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், நான் திரும்ப திரும்ப முயற்சி செய்து கொண்டே தான் இருப்பேன். ஒரு போதும் சோர்ந்து போக மாட்டேன். இன்னும் அதிக பலத்துடன் முயற்சிப்பேன்' என அந்த வீடியோவில் ஸ்ரீசாந்த் கூறியிருந்தார்.
தான் சொன்னதைப் போலவே, ஒரு செயலையும் இப்போது செய்து காட்டியுள்ளார் ஸ்ரீசாந்த். தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில், கேரள அணிக்காக ஆடி வரும் ஸ்ரீசாந்த், ஒடிசா அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில், முக்கிய பேட்ஸ்மேன்கள் உட்பட 5 பேர் விக்கெட்டுகளை ஸ்ரீசாந்த் அள்ளி கேரளாவின் வெற்றிக்கு காரணமாகவும் அவர் இருந்தார்.
திரும்ப இந்திய அணிக்காக ஆடுவதே என் நோக்கம் எனக்கூறிய ஸ்ரீசாந்த், ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காத போதும்,மனம் தளராமல் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருவதால், அனைவரின் கவனத்தையும் மீண்டும் அவர் பெறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
