மேட்ச் முடிஞ்ச அப்புறம் கைகுலுக்க போன ஸ்டோக்ஸ்.. விலகிப்போன பாக். வீரர்.. என்ன ஆச்சு?.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டியின் போது, பென் ஸ்டோக்ஸ் உடன் பாகிஸ்தானை சேர்ந்த முகமது அலி கைகுலுக்க மறுத்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 657 ரன்களும், பாகிஸ்தான் 579 ரன்களும் குவித்தன. அடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் அதிரடி காட்டிய இங்கிலாந்து 35.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்களுடன் 'டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 343 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 96.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகளை கொண்ட தொடரில் இங்கிலாந்து 1 - 0 என முன்னிலை பெற்றிருக்கிறது.
இதனிடையே, முல்தானில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்கள் எடுத்து. இதனையடுத்து ஆடிய பாகிஸ்தான் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இறங்கிய இங்கிலாந்து, 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இதில் 328 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தப் போட்டியில், பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியபோது கடைசி விக்கெட்டுக்காக இங்கிலாந்து காத்திருந்தது. அப்போது, பாகிஸ்தானின் முகமது அலி ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்தார். ராபின்சன் வீசிய பந்து அவருடைய பேட்டில் பட்டு கேட்ச் ஆனது. இதனால் மேட்ச் முடிந்ததாக நினைத்த இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் அலிக்கு கைகொடுக்க வந்தார்.
ஆனால், மேட்ச் இன்னும் முடியவடையவில்லை எனவும் தான் DRS எடுத்திருப்பதாகவும் அலி தெரிவித்து அவருடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து கேட்ச் ரிவியூவ் செய்யப்பட்டது. அதிலும் அவுட் என வரவே, இம்முறை அலி தானாக சென்று ஸ்டோக்ஸ்க்கு கைகொடுத்தார். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
— Guess Karo (@KuchNahiUkhada) December 12, 2022