எப்புட்றா மொமெண்ட்... தொடையில் கேட்ச் பிடித்த ஷிகர் தவான்.. மிரண்டுபோன வாஷிங்டன் சுந்தர்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்கதேச கிரிக்கெட் அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தொடையால் கேட்ச் பிடித்ததை பார்த்து வாஷிங்டன் சுந்தர் ஆச்சர்யப்பட்டுப்போன வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | காயத்துடன் களத்தில் போராடிய ரோஹித்.. கணவரை பற்றி உருக்கமாக மனைவி ரித்திகா பகிர்ந்த பதிவு!!..
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இரு அணிகளும் விளையாடி வருகின்றன. முதலாவது போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற்று 1 - 0 எனும் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.
டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி வீரர்கள் 50 ஓவர் முடிவில்7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை எடுத்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிர்ச்சி கொடுத்தபோதிலும் அந்த அணியின் மஹ்மத்துல்லா மற்றும் மெஹிதி ஹசன் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹசன் சதமடித்து அசத்தினார். இந்திய அணியின் பவுலர்களை பொறுத்தவரையில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து சேஸிங்கில் இறங்கிய இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்கதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இறுதியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் காயம்பட்ட நிலையில் போராடியும் நூலிழையில் இந்திய அணி வெற்றியை தவறவிட்டது.
இந்தப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வீசிய ஓவரில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்றும் நடைபெற்றது. ஷகிப் அல் ஹசன் ஸ்ட்ரைக்கில் இருந்தபோது சுந்தர் பந்துவீசினார். அப்போது, ஹசன் ஸ்வீப் ஆட, பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது. இதனை ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்றுகொண்டிருந்த தவான் பிடிக்க முயன்றார். அப்போது ஷார்ட் தெர்ட் மெனில் இருந்த சிராஜும் பந்தை கேட்ச் எடுக்க முயற்சித்தார்.
இதனிடையே தவான் தனது தொடையின் மூலமாக அந்த கேட்சை கட்சிதமாக பிடித்தார். இதனை ஆச்சர்யத்துடன் சுந்தர் பார்க்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
— Guess Karo (@KuchNahiUkhada) December 7, 2022
Also Read | உலக பணக்காரர்களின் பட்டியல்.. எலான் மஸ்க்குக்கே கொஞ்ச நேரத்துக்கு Tough கொடுத்த தொழிலதிபர்.. முழுவிபரம்..!

மற்ற செய்திகள்
