காயத்துடன் களத்தில் போராடிய ரோஹித்.. கணவரை பற்றி உருக்கமாக மனைவி ரித்திகா பகிர்ந்த பதிவு!!..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் இடையே நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று வங்காளதேச அணி தொடரை கைப்பற்றி உள்ளது.

Also Read | கையில காயத்தோட.. உள்ள வந்து கெத்து காட்டிய ரோஹித்.. "இப்டி ஒரு ரெக்கார்ட் வேற மனுஷன் பண்ணிட்டு போய்ட்டாரா?"
முதல் ஒரு நாள் போட்டியில், கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்கள் தேவை என்ற சூழலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அது மட்டுமில்லாமல், கடைசி விக்கெட்டிற்கு வெற்றி இலக்கையும் எட்டி, இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று (07.12.2022) நடைபெற்றிருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், 7 ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த மஹ்முதுல்லா மற்றும் மெஹிதி ஹாசன் ஆகியோர் சிறப்பாக ஆடி 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்காளதேச அணியை மீட்டனர். மஹ்முதுல்லா 77 ரன்களும், மெஹிதி ஹாசன் 100 ரன்களும் எடுத்திருந்தனர்.
50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்களை வங்காளதேச அணி சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக ரன் சேர்த்த போதும் கடைசி கட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டது.
காயம் காரணமாக பேட்டிங் செய்யாமல் இருந்த ரோஹித் ஷர்மா, கடைசியில் பேட்டிங் செய்ய வந்தார். அவர் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்த போதும், இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட, முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோஹித் ஷர்மாவால் அடுத்த பந்தில் ரன் அடிக்க முடியாமல் போனது.
இதனால், இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் வென்ற வங்காளதேச அணி, தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது. வங்காளதேச அணி தொடரை வென்றாலும் மறுபக்கம், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவை பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கு காரணம், காயத்துடன் ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்ய வந்தது தான்.
முதல் இன்னிங்சில் ஃபீல்டிங் செய்த போது காயம் அடைந்த ரோஹித் ஷர்மா, போட்டியின் பாதியில் ரத்த காயத்துடன் விலகி இருந்தார். அவர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தொடக்க வீரராக கூட அவர் களமிறங்கவில்லை. அப்படி இருந்த போதும் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் செய்ய வந்த ரோஹித், போட்டியை மிகவும் நெருக்கமாகவும் கொண்டு வந்திருந்தார். இதனால் அவரது செயலை எண்ணி ரசிகர்கள் நெகிழ்ந்து போயினர்.
இந்த நிலையில், ரோஹித் ஷர்மாவின் மனைவியான ரித்திகாவும் தனது கணவரை குறிப்பிட்டு மனம் நெகிழ்ந்து பகிர்ந்துள்ள பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த ரித்திகா, "ஐ லவ் யூ. மனதில் தோன்றுவதை அப்படியே செய்ய நினைக்கும் உங்களுக்குள் இருக்கும் மனிதனை பார்க்கும் போது நான் பெருமைப்படுகிறேன்" என உருக்கமாக ரித்திகா குறிப்பிட்டுள்ளார்.
Also Read | தர்காவில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்.. சுடர்விட்ட மத நல்லிணக்கம்.. நெகிழ வச்ச கிராம மக்கள்..!

மற்ற செய்திகள்
