"எல்லாத்தையும் நீங்களே பண்ணிட்டா, அப்றம் நாங்க எதுக்கு பாஸ்??.." மைதானத்தில் 'கோலி' செய்யும் 'சேட்டை'.. ஷமி பகிர்ந்த 'சுவாரஸ்ய' தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, ஜூன் மாதம் 18 ஆம் தேதியன்று, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இதற்காக இரண்டு அணிகளும், மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும், முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால், எந்த அணி கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
தற்போதுள்ள இந்திய அணியின் பவுலிங் யூனிட், வெளிநாட்டு மைதானங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு, சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்றிருந்த டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி, வரலாறு படைத்திருந்தது.
பும்ரா, ஷமி, இஷாந்த் ஷர்மா, சிராஜ், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், நடராஜன் என எந்த நாடு வீரர்களையும் அச்சுறுத்தக் கூடிய வகையிலான பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் அதிகம் உள்ளனர். இதில் ஷமியும் தனது பந்து வீச்சில், பல வேரியேஷன்களைக் காட்டக் கூடிய திறம் படைத்தவர்.
இந்நிலையில், கோலி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை, முகமது ஷமி (Mohammed Shami) தற்போது பகிர்ந்துள்ளார். 'பழைய மற்றும் புதிய வேகப்பந்து வீச்சாளர்கள், எப்போதும் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர்கள். ஆனால், பந்து வீச்சாளர்களின் ஆக்ரோஷத்தையும் முந்திக் கொண்டு செயல்படும் வீரர் ஒருவர் உள்ளார். ஆம், எங்களின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) தான் அது. சில நேரம் நாங்கள் எடுக்கும் விக்கெட்டுகளுக்கு, எங்களை விட, கோலி அதனை அதிகமாக கொண்டாடுவார். அது தொடர்பான புகைப்படங்கள் அதிகம் வைரலாகும்.
அப்போது நான் கிண்டலாக அவரிடம் கேட்பேன், "இது எனது விக்கெட்டா, இல்லை உங்களுடையதா?" என்று. பந்து வீச்சாளர்களை விட, அதனை கோலி தான் அதிகமாக கொண்டாடுவார். சில சமயத்தில், நாம் விக்கெட்டை எண்ணி அதிகம் மகிழ்ச்சி கொள்ளாத போது, கோலி நம்மிடம் கேட்பார், 'ஏன் இந்த விக்கெட்டிற்காக நீங்கள் மகிழவில்லையா' என்று. அதற்கு நான் கூறுவேன், "எனக்காக தான் நீங்கள் மொத்தமாக கொண்டாடி விட்டீர்களே" என பதிலளிப்பேன்' என ஷமி கூறினார்.
தொடர்ந்து, கோலி கேப்டன்சி குறித்து பேசிய ஷமி, 'விராட் அதிகம் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர் தான். ஆனால், ஒரு அணியாக எங்களை இதுவரை, மிகவும் அற்புதமாக வழி நடத்தியுள்ளார். அது மட்டுமில்லாமல், அவர் மிகவும் ஆக்ரோஷமான ஒரு பேட்ஸ்மேனும் கூட தான்' என ஷமி தெரிவித்துள்ளார்.