VIDEO: கேட்ச்னா இது கேட்ச்...! 'எங்க வர்ற பந்த எப்படி பிடிக்குறார் பாருங்க...' - சான்ஸே இல்ல, வேற லெவல்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி பிடித்த கேட்ச் அவரின் பெஸ்ட் கேட்ச் வரிசையில் இடம் பெரும் என பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இந்தியா 10 விக்கெட்கள் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது.
அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் முதற்கட்ட பேட்ஸ்மென்கள் நொண்டி விளையாடுவது ரன்களை ஏற்றமால் வந்த மாறியே திரும்பி சென்றனர். முதற்கட்ட 20 ஓவர்களில் அதிக அளவில் இங்கிலாந்து அணி விக்கெட்களை சிந்தியதால், இந்தியாக்கு தான் வெற்றி நிச்சயம் என ரசிகர்கள் குதூகலமாய் இருந்தனர்.
7 பேர் அவுட் ஆனா பிறகு 8-வது வீரராக களமிறங்கி சாம் கரன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்தியாவிற்கு வெற்றி என்று உறுதி செய்யப்பட்ட ஆட்டத்தை சாம் கரண் அபார திறமையால் கடைசி வரை கொண்டு வந்து மரண பயத்தை காட்டினார் என்றே சொல்லலாம். ஆனால் 7 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா வெற்றிபெற்று கிரிக்கெட் தொடரையும் வென்று சாதனை படைத்தது.
இங்கிலாந்து அணியின் சாம் கரண் 95 ரன்கள் உடன் கடைசி வரை களத்தில் இருந்து ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். தொடர் நாயகன் விருதை இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் பேரிஸ்டோவ் பெற்றார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி வீரர்கள் அதிக கேட்ச்களை விட்டு சொதப்பிய சம்பவங்களும் நடந்தது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கரன் கேட்ச்களை தவறவிட்டார். சர்துல் தாகூர், தங்கராசு நடராஜனும் தங்கள் பங்குக்கு தலா ஒரு கேட்சை தவறவிட்டனர்.
ஆனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பிடித்த ஒரு அபாரமான கேட்ச், விட்ட அனைத்து கேட்ச்களையும் மறக்க வைக்கும் விதமாக இருந்தது என சொல்லலாம். விராட் கோலி கேட்ச் பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் பந்து வீச அதை எதிர்கொண்டு இருந்தார் இங்கிலாந்து வீரர் அடில் ரஷித். பந்தை வேகமாக அடித்தப்போது, அப்போது ஷாட் மிட்-ஆஃபில் ஃப்ல்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி பாய்ந்து அந்த பந்தை இடது ஒற்றைக்கையால் கேட்ச் பிடித்தார். அடில் ரஷித் 19 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
விராட் கோலியின் பெஸ்ட் கேட்ச்களில் இதுவும் ஒன்று என அவரின் ரசிகர்கள் இணையத்தில் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Outstanding catch @imVkohli 🔥🔥#INDvENG #ViratKohli pic.twitter.com/nTtFssuefN
— Reema Malhotra (@ReemaMalhotra8) March 28, 2021

மற்ற செய்திகள்
