"என்ன பாத்தா அப்டியாங்க தெரியுது??.." 'செய்தியாளர்' சந்திப்பில் 'ரோஹித்' செய்த 'காமெடி'... வீடியோ இப்போ செம 'வைரல்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், அதன்பிறகு ஆட வந்த கோலி, கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக ஆடி, இந்திய அணியை மீட்டனர். இதனிடையே, இன்றைய போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா (Rohit Sharma), பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது, நகைச்சுவையாக செய்த செயல் ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.
இந்த சந்திப்பில், நிருபர் ஒருவர், ரோஹித் என குறிப்பிடுவதற்கு பதிலாக, 'ஹாய் கோலி' என பெயரை தவறுதலாக குறிப்பிட்டார். தனது பெயரை தவறாக கூறியதை, சில நொடிகளுக்குப் பிறகு உணர்ந்து கொண்ட ரோஹித் ஷர்மா, தனது தொப்பியை நீக்கி, தான் ரோஹித் ஷர்மா தான் என்பதை உறுதி செய்யும் வகையில், தனது முகத்தைக் கை காட்டினார்.
Journalist mistakenly said "Hi Virat" to Rohit
Rohit's Reaction : 🤣 pic.twitter.com/XUH5NtDDm9
— ADARSH (@Adarshdvn45) March 26, 2021
இடையில், அவர் நக்கலாக சிரிக்கவும் செய்த நிலையில், இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
