"'கோலி' மேல இவ்ளோ அன்பா??.." 'RCB' வீரர் சொன்ன 'விஷயம்'.. "ப்பா, வெறித்தனமான 'ஃபேனா' இருப்பாரு போலயே!.." மெய்சிலிர்த்த 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக, தற்போது போட்டிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் கோலி (Kohli) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி, இந்த சீசனில் மிக சிறப்பாக ஆடி வருகிறது. இதுவரை 7 போட்டிகள் ஆடியுள்ள அந்த அணி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத பெங்களூர் அணி, இந்த முறை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பி வருவதால், கோப்பையை கைப்பற்றும் அணியில் ஒன்றாகவும் பெங்களூர் அணி கருதப்பட்டு வருகிறது.
இதனிடையே, அந்த அணியை சேர்ந்த இளம் வீரர் ஒருவர் செய்த செயல், அந்த அணியின் ரசிகர்களை அதிகம் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. முன்னதாக, இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்ற ஏலத்தில், பெங்களூர் அணி கேரள வீரர் முகமது அசாருதீனை (Mohammed Azharuddeen), 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் அசாருதீன், சையது முஷ்டாக் அலி தொடரில் 54 பந்துகளில் 138 ரன்கள் எடுத்திருந்தார்.
அவரின் இந்த அதிரடி ஆட்டம் தான் ஐபிஎல் ஏலத்தில் அவரை இடம்பெறச் செய்தது. இவர் பெங்களூர் அணிக்காக ஆடும் தேர்வானது மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். இதற்கு காரணம், அவர் கோலியின் வெறித்தனமான ரசிகர் ஆவார். தனக்கு மிகவும் பிடித்தமான வீரரின் அணியில் இடம் பெற்றதால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருந்தார் அசாருதீன்.
கோலியை நேரில் காண, தான் ஆவலுடன் இருப்பதாகவும் ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு முன் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில், அசாருதீனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவர் ட்விட்டரில் தற்போது செய்த ஒரு பதிவுதான், பெங்களூர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகியுள்ளது.
அசாருதீன் பதிவிட்ட புகைப்படம் ஒன்றில், பெங்களூர் ஜெர்ஸி ஒன்றில், கேப்டன் கோலி ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுக்கிறார். அருகில் தானும் நிற்கும் இந்த புகைப்படத்தை அசாருதீன் பகிர்ந்த நிலையில், 'இந்த ஜெர்சியை நான் ஃபோட்டோ ஃப்ரேம் செய்து வைக்க போகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
Going to get this jersey framed 💚 pic.twitter.com/o3iIhU4hJx
— Mohammed Azharuddeen (@Azhar_Junior_14) May 12, 2021
இதனைக் கண்ட ரசிகர்கள் அனைவரும், கோலிக்கு இப்படி ஒரு தீவிர ரசிகன் அணியிலேயே இருக்கிறாரா என்பது போல, பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
