"'கோலி' விக்கெட் தான் என்னோட 'டார்கெட்'.. எப்டி தட்டித் தூக்குறேன் பாருங்க.." வெறித்தனமான இலக்குடன் தயாராகும் இளம் 'வீரர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் ஆரம்பகமாகவுள்ளதால், ரசிகர்கள் அனைவரும் அதிக ஆவலுடன் காத்திருப்பில் உள்ளனர்.

14 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இந்த முறை நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர்களில், எந்த அளவுக்கு அனுபவ வீரர்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளதோ, அந்த அளவுக்கு இளம் வீரர்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜொலித்த பல இளம் வீரர்கள் இன்று சர்வதேச இந்திய அணிக்காக களமிறங்கவும் செய்துள்ளனர். அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் இஷான் போரல் மீது அனைவரது கவனமும் இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளரான இவர், முதல் தர போட்டிகள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதல் முறையாக, ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள இஷான் போரல், இந்த சீசனில் தன்னுடைய விக்கெட் இலக்கு யார் என்பது பற்றி பேசியுள்ளார். 'ரஞ்சி தொடரின் போது நான் கே எல் ராகுல் விக்கெட்டை ஒருமுறை எடுத்தேன்.
அதே போல, இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை எடுக்க ஆசைப்படுகிறேன். ஏனெனில், இந்திய அணிக்காக பல போட்டிகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இதனால், அவரின் விக்கெட்டை ஐபிஎல் தொடரில் வீழ்த்த வேண்டும் என நினைக்கிறேன்.
இது அனைத்தையும் விட, இந்திய கேப்டன் கோலியின் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்பதில் தான் குறியாக உள்ளேன். ஏனெனில், அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பர் 1 வீரராக வலம் வருகிறார்' என இஷான் போரல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில், வலைப்பந்து வீச்சாளராக இருந்த இஷான் போரல், அதன் மூலம் இந்திய வீரர்களுக்கு பந்து வீசியது அதிக அனுபவத்தை தனக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
