‘அடுத்த கேப்டனா இவர் கரெக்டா இருப்பாரு’.. கருத்து கூறிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 17, 2019 03:26 PM

இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டனாக ஜாஸ் பட்லர் நல்ல தேர்வாக இருப்பார் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Buttler is a strong candidate for captaincy, Says Andrew Strauss

கடந்த ஞாயிற்றுக்கிழமை லாட்ர்ஸ் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது. இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது இதுவே முதல்முறையாகும். முன்னாதாக மூன்று முறை உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிவரை சென்று கோப்பையை இங்கிலாந்து அணி நழுவவிட்டது.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரின் பங்கு மிக முக்கியமானதாக அமைந்தது. இதில் பட்லர் 59 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களும் எடுத்தது இங்கிலாந்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூஸ் அணியின் கேப்டன்ஷிப் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘ஒருவேளை இயர்ன் மோர்கன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக விரும்பினால், அந்த இடத்துக்கு பட்லர் சரியாக தேர்வாக இருப்பார். அவர் நல்ல கிரிக்கெட் வீரர் மற்றும் நல்ல மனிதர். ஆட்டத்தை புரிந்து செயல்படகூடியவர்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #BUTTLER #CAPTAINCY #ANDREW STRAUSS