‘தொடர்ந்து என்ன இம்ப்ரெஸ் பண்ணிட்டே இருக்காரு’.. வில்லியம்சனை பாராட்டி ட்வீட் செய்த பிரபல வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 15, 2019 12:48 PM

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் குறித்து சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Sachin Hails Kane Williamson after a nail biting final

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை வீழ்ந்தி இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. இதனால் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் தடைவையாக இறுதிப்போட்டியில் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

இதில் இங்கிலாந்து அணி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் (84), மற்றும் ஜாஸ் பட்லர் (59) கூட்டணி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியது அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன்வில்லியம்சன் கடைசிவரை வெற்றிக்காக போராடிய விதத்தை பாராட்டு விதமாக பலரும் டுவிட்டரில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் வில்லியம்சனை பாராட்டி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,‘கேன்வில்லியம்சன் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். அவர் ஆடிய ஆட்டம் மற்றும் தன்னையும், அணியையும் கொண்டு சென்ற விதம் அற்புதமானது’ என சச்சின் பதிவிட்டுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #SACHINTENDULKAR #WILLIAMSON #ENGVNZ #CWC19FINAL