‘அவர்தான் கேப்டனாகனும்’... ‘இந்திய அணியின் முன்னாள் வீரர் ட்வீட்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 13, 2019 11:47 PM

இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்ததையடுத்து, ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் டெஸ்ட் அணி வீரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Is it time for Rohit Sharma to lead India? Wasim Jaffer tweet

உலகக் கோப்பைப் போட்டியில், லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வி அடைந்த இந்திய அணி, அரைறுதியில் நியூஸிலாந்திடம் 18 ரன்களில் தோல்வி அடைந்தது. டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, கோலி, ராகுல் மிக மோசமாக ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். கோப்பையை வெல்லும் அணியாக கருதப்பட்ட இந்திய அணி, மிக மோசமாக தோல்வி அடைந்தது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனால், இந்திய அணியில் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து, கேப்டன்ஷிப்பை பறித்து, ரோஹித் சர்மாவிடம் வழங்கக் கோரி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் வாசிம் ஜாபர் பதிவிட்ட கருத்தில், ‘இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதா?, 2023-ம் ஆண்டு உலகக்கோப்பையில்  ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்த நான் விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தோல்விக்கு பிறகு, அணியில் உள்ள வீரர்கள் கோலிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் ஆதரவாக இரண்டாக பிரிந்துள்ளதாக, பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டது. இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ஜாபரின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.