முக்கிய விக்கெட்டை கேட்ச் பிடித்து ஆட்டத்தை மாற்றிய பெர்க்குசன்..! வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 14, 2019 11:19 PM
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் பெர்குசன் முக்கிய விக்கெட்டை கேட்ச் பிடித்து அவுட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டி லாட்ர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லதம் 47 ரன்களும் மற்றும் கேன்வில்லியம்சன் 30 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் 17 ரன்களும், ஜானி பேர்ஸ்டொ 36 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து வந்த ஜே ரூட் 7 ரன்னில் அவுட்டாக, அடுத்துவந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயர்ன் மோர்கன் 9 ரன்னில் நியூஸிலாந்து வீரர் பெர்க்குசனிடன் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். இந்நிலையில் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் கூட்டணி நிதானமாக ஆடி ரன்களை சேர்க்க தொடங்கியுள்ளது.
Ferguson takes a stunner to remove Eoin Morgan. NEW Zealand on top #ENGvsNZ #CWC19Final pic.twitter.com/pomMSmblZ7
— Get on with Sports (@getonwithsports) July 14, 2019
