‘சூப்பர் ஓவர்’ சமனில் முடிந்தும் வெற்றி பெற்ற இங்கிலாந்து..! பைனில் நடந்த த்ரில் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 15, 2019 12:28 AM

நியூஸிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பைப் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

England win maiden World Cup title after thrilling Super Over

இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டி லாட்ர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லதம் 47 ரன்களும் மற்றும் கேன்வில்லியம்சன் 30 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஒரு ஓவரில் 15 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியும் 15 ரன்களை எடுத்தது. இதனால் போட்டி மறுபடியும் சமனில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள்(இங்கிலாந்து 24, நியூஸிலாந்து 16) அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி இங்கிலாந்து அணி புது சரித்திரம் படைத்துள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #NZVENG #CWC19FINAL #SPIRITOFCRICKET #WEAREENGLAND #SUPEROVER