‘அந்த நிமிடத்தில், அப்டி நடக்கும்னு நினைக்கல’... ‘தோனியின் ரன் அவுட், எங்களின் அதிர்ஷ்டம்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 13, 2019 08:11 PM
உலகக் கோப்பை தொடரில் தோனி ரன் அவுட் ஆனது, தங்கள் அணியின் அதிர்ஷ்டம் என நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம், கடந்த 9-ம் தேதி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆட்டத்தின் பரபரப்பான நேரத்தில், நியூசிலாந்து வீரர் குப்திலால் தோனி, ரன் அவுட் ஆனார். அதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில், இது குறித்து நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் கூறியுள்ளார். அதில், ‘தோனிக்குப் போடப்பட்ட பந்து, என் கையில் வரும் என நினைக்கவில்லை. என்னை நோக்கி வருவதைக் கண்டு, அதனைப் பிடிக்க தயாராக இருந்தேன். பந்து கைக்கு வந்தவுடன் ஸ்டெம்பை நோக்கி வேகமாக வீசினேன். எங்கள் நேரம், அது நேராக ஸ்டெம்பில் பட்டுவிட்டது. இதனால் தோனி ரன் அவுட் ஆனது, எங்கள் அணிக்கு மிகச் சிறந்த அதிர்ஷ்டம்’ என தெரிவித்துள்ளார்.
