'நடுவர்களை அறிவித்த ஐசிசி'... 'செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்'... அப்படி என்ன தான் பண்ணுனாரு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jul 13, 2019 11:41 AM

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கான நடுவர்களை ஐசிசி அறிவித்திருக்கும் நிலையில், அதில் இங்கிலாந்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

Dharmasena and Marais Erasmus appointed to stand in the World Cup

உலகக்கோப்பை இறுதி போட்டியானது நாளை லார்ட்ஸில் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான நடுவர்களாக, குமார் தர்மசேனா மற்றும் மரைஸ் எராஸ்மஸ் ஆகிய இருவரும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இதனிடையே ஆஸ்திரேலியேவுக்கு எதிரான அரையிறுதி போட்டியின் போது, இலங்கை நடுவர் குமார் தர்மசேனா ஜேசன் ராயை அவுட் என அறிவித்தது சர்ச்சையாக மாறியது.

அரையிறுதி போட்டியில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் 85 ரன்கள் குவித்தார். இதற்கிடையே பேட் கும்மின்ஸ் வீசிய பந்தை அவர் எதிர்கொண்ட போது, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் என அறிவிக்கப்பட்டார். டிவி ரிப்ளேவில் பார்க்கும் போது அவுட் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து களத்தை விட்டு போக மறுத்த ஜேசன் ராயை நடுவர் மரைஸ் சமாதானப்படுத்தி வெளியேற்றினார்.

இதனிடையே இதே நடுவர்களை இறுதிப் போட்டிக்கு ஐசிசி அறிவித்திருப்பது இங்கிலாந்து ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. இதுதொடர்பாக தங்களது வருத்தங்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள்.

Tags : #ICC #ICCWORLDCUP2019 #WORLDCUPINENGLAND #ICCWORLDCUP #JASON ROY #KUMAR DHARMASENA #MARAIS ERASMUS