VIDEO: நான் ஏன் 'அப்படி' பண்ணினேன்னா... 'பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ 'மேடையில்' செய்த காரியம்...' - செம 'டிரெண்ட்' ஆகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபோர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மேஜையில் இருந்த இரு கோகோ கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரென்டிங் ஆகி வருகிறது.
யூரோ-2020 கால்பந்து போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தொடரின் போர்சுக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்தார்.
அந்த வீடியோவில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரொனால்டோ வந்தவுடன் மேஜையில் இருந்த கோகோ கோலா பாட்டில்கள் இருந்ததை பார்த்து அதிருப்தியடைந்தார். உடனே முன்னால் இருந்த இரு கோகோ கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலை தூக்கிக்காட்டி, “அகுவா” என தெரிவித்தார். (அகுவா என்பது நீருக்கான போர்ச்சுக்கீசிய சொல்) குளிர்பானங்களுக்கு பதில் மக்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என செய்கை செய்தார்.
யூரோ-2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும். மேலும் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ரொனால்டோவுக்கு எதிராக யுஇஎஃப்ஏ இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் இன்று (15-06-2021) நடைபெறும் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஹங்கேரியை எதிர்கொள்கிறது. சர்ச்சை குறித்து பேசிய ரொனால்டோ, "நான் பல ஆண்டுகளாக மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடி வருகிறேன். எனவே இதை ஒரு காரணமாகக் கொண்டு என்னை எதுவும் செய்ய முடியாது. இடமாற்றம் நடந்தாலும் சரி அல்லது அடுத்து என்ன நடந்தாலும் சரி, அதனால் எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், ரொனால்டோ அளித்த விளக்கத்தில், தனது மகன் தினமும் கோகோ கோலா போன்ற குளிர்பானங்களையும், நொறுக்கு தீனி பண்டங்களையும் அதிகளவில் சாப்பிடுவது எனக்கு பிடிப்பதில்லை. எனவே அதை மனதில் வைத்து தான் அப்படி நடந்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
Cristiano Ronaldo was angry because they put Coca Cola in front of him at the Portugal press conference, instead of water! 😂
He moved them and said "Drink water" 😆pic.twitter.com/U1aJg9PcXq
— FutbolBible (@FutbolBible) June 14, 2021