என்னன்னே தெரியலையே...! 'தண்ணி செவப்பா வருது...' 'பதறிய பொதுமக்கள்...' - ஆய்வுக்கு பின் தெரிய வந்த உண்மை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோட்டில் கழிவுநீர் சாக்கடையில் இரத்த நிறத்தில் தண்ணீர் வந்ததை கண்டு சுற்றுவட்டார மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம், பெரியசேமூர், சூளை மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம் ஆகிய பகுதிகளின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான சாய ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் உள்ள சாக்கடையில் சிவப்பு நிறத்தில் நீர் வந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, காவல் துறையினருக்கும், வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள பாலத்தின்கீழ் கொட்டப்பட்டுள்ள சாயக் கழிவு மூட்டைகள் கொட்டப்பட்டுள்ளது தெரியவந்து. அந்த மூட்டைகள் மூலமே நிறம் மாற்றம் அமைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து இந்த மூட்டைகளை யார் இந்த இடத்தில் வைத்தது என்ற விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்குமுன்பும் ஈரோட்டில் சாய கழிவு நீரை கால்வாயில் கலந்ததை அடுத்து 30 சாய ஆலைகள் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
