‘இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்’!.. 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்ட நியூஸிலாந்து.. இந்திய வம்சாவளி வீரர் ஒருவருக்கு வாய்ப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 15, 2021 01:47 PM

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

New Zealand confirms 15-member squad for WTC final

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவும், நியூஸிலாந்து அணியும் மோதவுள்ளன. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள், அங்கு இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். அதேபோல் நியூஸிலாந்து அணியும், இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது.

New Zealand confirms 15-member squad for WTC final

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூஸிலாந்து அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 20 பேர் கொண்ட பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டது. தற்போது அதிலிருந்து 15 பேர் கொண்ட பட்டியல் உறுதி செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

New Zealand confirms 15-member squad for WTC final

இந்த பட்டியலில் கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் ப்ளண்டெல், ட்ரெண்ட் போல்ட், டெவன் கான்வே, கொலின் டி கிராண்ட்ஹோம், மேட் ஹென்றி, கைல் ஜேமீசன், டாம் லாதம், ஹென்றி நிக்கோல்ஸ், அஜஸ் படேல், டிம் சவுதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், பிஜே வாட்லிங், வில் யங் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

New Zealand confirms 15-member squad for WTC final

இந்த 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணியில், இந்திய வம்சாவளி வீரரான அஜஸ் படேலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அஜஸ் படேல், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. New Zealand confirms 15-member squad for WTC final | Sports News.