‘என்ன நடக்கிறது அணியில்..?’ இந்திய வீரரின் செயலால் வலுக்கும் சந்தேகம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jul 26, 2019 04:05 PM
உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட உள்ளது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இந்திய அணி தொடரை விட்டே வெளியேறியது. இதைத்தொடர்ந்து அணித்தேர்வில் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அதிகமாக வாய்ப்பு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் விராட் தலைமையில் ஒரு அணியாகவும், ரோஹித் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்படுவதாகக் கூறப்பட்டது.
பிசிசிஐ தரப்பிலிருந்து விராட், ரோஹித் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு எதுவுமே இல்லை எனக் கடைசியாக விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது ரோஹித்தின் செயல் மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை அன்ஃபாலோ செய்த ரோஹித் தற்போது அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மாவையும் அன்ஃபாலோ செய்துள்ளார். ஆனால் கோலி இன்னும் ரோஹித்தை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ரோஹித் அன்ஃபாலோ செய்த பிறகு அனுஷ்கா ஷர்மா தன்னுடைய ஸ்டேட்டஸில், “பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன்தான் செயல்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் யாரையும் குறிப்பிடாமல் வைத்திருந்த அந்த ஸ்டேட்டஸ் ரோஹித் ஷர்மாவுக்காகவே என விராட், ரோஹித் ரசிகர்கள் சிலர் தற்போது மோதத்தொடங்கியுள்ளனர்.
