‘ஓய்வுக்குப் பிறகு’ முதல்முறையாக களமிறங்கவுள்ள.. ‘பிரபல இந்திய வீரர்’.. ‘உற்சாகத்தில் ரசிகர்கள்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Aug 16, 2019 11:35 AM
உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படாததைத் தொடர்ந்து அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பதி ராயுடு அணியில் 4வது இடத்தில் களமிறங்கி விளையாடி வந்தார். உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி சார்பில் ராயுடு தேர்ந்தெடுக்கப்படுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அந்த வாய்ப்பு தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்த அம்பதி ராயுடு அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த முடிவைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
அடுத்ததாக அம்பதி ராயுடு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.வி.பார்த்தசாரதி டிராபிக்கான ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளார். இந்தத் தொடர் வரும் 19ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது.
