மறுபடியும் இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 20, 2019 11:32 AM

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய ஏ அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Vijay Shankar, Samson, Nitish Rana, Thakur in A squads for one dayers

தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் உலகக்கோப்பைத் தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பிடித்துள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

இப்போட்டியின் முதல் மூன்று போட்டிகளுக்கு மனீஷ் பாண்டே கேப்டானகாவும், அடுத்த இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும் அணியை வழி நடத்துகின்றனர். இதில் ஸ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதலில் நடந்த டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதில் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #BCCI #TEAMINDIA #INDVSA #VIJAYSHANKAR #SHREYASIYER #MANISHPANDEY #NITISHRANA #SANJUSAMSON #SHARDULTHAKUR