என்னாச்சு ‘தல’க்கு..! இன்னைக்கு மேட்சல காயத்தோடுதான் விளையாடுவாரா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 02, 2019 04:34 PM

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது தோனியின் கையில் காயம் ஏற்பட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhoni spitting blood after an injured thumb during IND vs ENG match

உலகக்கோப்பை லீக் சுற்றின் 40 -வது போட்டி இன்று(02.07.2019) பிர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்திய அணியை பொறுத்தவரை இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. அதில், குல்தீப் யாதவிற்கு பதிலாக புவனேஷ்வர்குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த தினேஷ் கார்த்திக் அணியில் இணைந்துள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கைவிரலில் காயம் ஏற்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் கடைசி 5 ஓவர்கள் தோனி மந்தமாக விளையாடியதாக பலரும் விமர்சனம் செய்தனர். அப்போட்டியில் தோனி 42 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேட்டிங் செய்யும் போது தோனியின் கையின் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #INDVENG #INDVBAN #INJURY