VIDEO : "எனக்கு 'விசில்' எல்லாம் போட தெரியாது, ஆனா..." 'உத்தப்பா' தமிழிலேயே சொன்ன அந்த 'விஷயம்'... கொண்டாடித் தள்ளிய 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
இதற்கான ஏலம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அண மொயீன் அலி, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்தது. சென்னை அணி ஏலத்திற்கு முன்பாகவே, டிரேடிங் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து உத்தப்பாவை மாற்றிக் கொண்டது.
கடந்த சீசனில், தொடக்க வீரராக இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் ஓய்வை அறிவித்திருந்த நிலையில், அவருக்கு பதிலாக உத்தப்பாவை சென்னை அணி எடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மறுபக்கம், வயதான வீரர்களை மீண்டும் மீண்டும் அணியில் இணைப்பதை விமர்சனமாகவும் ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிஎஸ்கே அணியில் இணைந்தது பற்றியும், தோனி குறித்தும் பேசியுள்ள வீடியோ ஒன்றை உத்தப்பா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், 'வணக்கம் சென்னை, எப்படி இருக்கீங்க?. எனக்கு சிறப்பாக வரவேற்பளித்த சிஎஸ்கே ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இது கொஞ்சம் லேட் ஆனாலும், லேட்டஸ்ட்டாக இருக்குமென நான் நினைக்கிறேன். தோனியுடன் நான் விளையாடி, கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகி விட்டது.
தோனி ஓய்வு பெறுவதற்கு முன், அவருடன் இணைந்து ஒரு தொடரில் ஆடி, வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தால், நிச்சயம் சென்னை அணிக்காக அதனை செய்வேன். எனக்கு விசில் போடத் தெரியாது. ஆனால், உங்கள் கைகளைக் கொண்டு விசில் போட வைப்பேன்' என உத்தப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உத்தப்பா, இந்த வீடியோவில் பெரும்பாலும் தமிழிலேயே சிறப்பாக பேசி அசத்தியுள்ளார்.
அதுவும் 'ரசிகர்கள் விசில் அடிப்பது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்' என அவர் தமிழிலேயே கூறியுள்ளது, ரசிகர்களிடையே அதிகம் ஹிட்டடித்து வருகிறது.