மேக்ஸ்வெல்லை வாங்க போட்டி போட்ட 'சிஎஸ்கே', 'ஆர்சிபி'... இறுதியில் 'பெருந்தொகை' கொடுத்து வாங்கிய 'அணி'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்கள் பலரை அணியில் எடுக்க 8 ஐபிஎல் அணிகளும் போட்டி போட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து, ஐபிஎல் ஏலத்தில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவரது பெயர் அறிவிக்கப்பட்டதும், ஏலத்தில் எடுக்க சில அணிகள் போட்டி போட்டன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கடுமையாக போட்டி போட்ட நிலையில், எந்த அணி அவரை எடுக்கும் என்ற பரபரப்பு நிலவியது.
Big Show Maxi is #NowARoyalChallenger! 🤩
A huge warm welcome to the RCB #ClassOf2021. 🙌🏻
Price: 1️⃣4️⃣.2️⃣5️⃣ CR#PlayBold #BidForBold #WeAreChallengers #IPLAuctions2021 #IPLAuction pic.twitter.com/qFKkg4XjOw
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 18, 2021
இறுதியில் 14.25 கோடி கொடுத்து பெங்களூர் அணி மேக்ஸ்வெல்லை வாங்கியது. சென்னை அணிக்கு ஒரு வெளிநாட்டு வீரரை மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில், கையில் சுமார் 19 கோடி மட்டுமே மீதமிருந்தது. இருந்த போதும், மேக்ஸ்வெல்லை சொந்தமாக்க, சென்னை அணி 14 கோடி வரை போராடி பார்த்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
