"'சிஎஸ்கே' குடும்பம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..." ஒரே ஒரு 'வெளிநாட்டு' வீரருக்கு இருந்த 'வாய்ப்பு'... சென்னை டீம் எடுத்தது இவர தான்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்கள் பலரை அணியில் எடுக்க 8 ஐபிஎல் அணிகளும் போட்டி போட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை அணிக்கு ஒரு வெளிநாட்டு வீரரை மட்டுமே எடுக்க முடியும் என்பதால், அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை எடுக்க முயற்சி செய்தது. ஆனால், சென்னை அணியின் கையில் சுமார் 19 கோடி ரூபாய் மட்டுமே மீதமிருந்த நிலையில், பெங்களூர் அணி அவரை 14.25 கோடி கொடுத்து வாங்கியது.
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயீன் அலியை வாங்க சென்னை அணி முயற்சி செய்த நிலையில், இறுதியில் 7 கோடிக்கு மொயீன் அலியை சென்னை அணி வாங்கியது. இனிமேல் வெளிநாட்டு வீரர்களை சென்னை அணியால் எடுக்க முடியாத நிலையில், இந்திய வீரர்கள் 6 பேர் வரை மட்டுமே ஏலத்தில் இனி சென்னை அணியால் எடுக்க முடியும்.
We got it Ali figured out. Welcome to the #SuperFam! #WhistlePodu #Yellove #SuperAuction 💛🦁 pic.twitter.com/5IW7hM1xPi
— Chennai Super Kings (@ChennaiIPL) February 18, 2021
இதனிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்ற போது, ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த மொயீன் அலியிடம் 'வலிமை' அப்டேட்டை சென்னை ரசிகர்கள் கேட்டிருந்தனர்.
இதனால், சென்னை அணிக்கு மொயீன் அலி தேர்வாவதை முன்னரே கணித்து தான் ரசிகர்கள் அப்படி அவரிடம் கேட்டார்கள் என்பது போன்ற மீம்ஸ்களையும் ரசிகர்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.