RISHABH PANT: 6 இடங்களில் காயம்.. முழங்காலில் தசைநார் கிழிவு.. ரிஷப் பண்ட்டின் உடல்நிலை குறித்து BCCI அறிக்கை..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

Also Read | புதுக்கோட்டை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு போன் மூலமாக ஆறுதல் கூறிய நடிகர் கமல்ஹாசன்..!
ரிஷப் பண்ட், உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், விபத்தில் பலத்த காயமடைந்த அவர் உடனடி சிகிச்சைக்கு சக்ஷாம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உயர் சிகிச்சைக்கு டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ரிஷப் பண்ட் உடல் நிலை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அந்த அறிக்கையில், "தற்போது ரிஷப்பிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழு நெருங்கிய தொடர்பில் இருக்கும் நிலையில் பிசிசிஐ ரிஷப்பின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
ரிஷப் சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுவதையும், இந்த அதிர்ச்சிகரமான கட்டத்தில் இருந்து அவர் வெளிவரத் தேவையான அனைத்து ஆதரவை பெறுவதையும் கிரிக்கெட் வாரியம் வாரியம் பார்த்துக் கொள்ளும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் வெள்ளிக்கிழமை காலை கார் விபத்தில் உயிர் பிழைத்துள்ளார், அவரது நெற்றியில் இரண்டு வெட்டுக்கள், வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது.வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் ஆகியவற்றிலும் காயம் ஏற்பட்டுள்ளது மற்றும் அவரது முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் பங்களாதேஷுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய டெஸ்ட் அணியில் பந்த் இடம்பெற்றிருந்தார். அடுத்த மாதம் இலங்கைக்கு எதிரான போட்டிகளுக்கான இருபது20 மற்றும் ஒருநாள் அணியில் அவர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
Media Statement - Rishabh Pant
The BCCI will see to it that Rishabh receives the best possible medical care and gets all the support he needs to come out of this traumatic phase.
Details here 👇👇https://t.co/NFv6QbdwBD
— BCCI (@BCCI) December 30, 2022

மற்ற செய்திகள்
