இரட்டை சதம் அடிச்சுட்டு துள்ளி குதிச்ச வார்னர்.. அடுத்த செகண்ட் நடந்த விபரீதம்.. சோகத்தில் ரசிகர்கள்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது இரட்டை சதம் அடித்தவுடனேயே காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார் வார்னர். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Also Read | இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட்ல இடம்பெறாமல் போன நட்சத்திர வீரர்.. முழு விபரம்..!
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. சிட்னியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 3 போட்டிகளை கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் க்ரீன் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா(1), மார்னஸ் லபுஷேன்(14) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
இருப்பினும் வார்னருடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் நிதானமான ஆட்டதை வெளிப்படுத்தினார். 83 ரன்கள் எடுத்த ஸ்மித் அவுட்டாக மற்றொரு புறம் வார்னர் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து அனைவரையும் திக்குமுக்காட செய்தார். 3 வது விக்கெட்டுக்கு வார்னர் - ஸ்மித் இணை 239 ரன்கள் குவித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.
இந்நிலையில், இரட்டை சதம் அடித்த வார்னர் தன்னுடைய ஸ்டைலில் துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அவரது காலில் ஏற்பட்டிருந்த காயம் மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து நடக்கவே சிரமப்பட்ட வார்னர், சக வீரர்களின் துணையுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார். 200 அடித்தவுடன் ரிட்டையர் ஹர்ட் ஆகி மைதானத்தில் இருந்து வெளியேறிய வார்னரை ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
A double century for David Warner!
But his #OhWhatAFeeling jump comes at a cost! 😬#AUSvSA | @Toyota_Aus pic.twitter.com/RqJLcQpWHa
— cricket.com.au (@cricketcomau) December 27, 2022