145 வருஷ டெஸ்ட் வரலாற்றுல இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்ல.. பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டியில் நடந்த சுவாரஸ்யம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Dec 28, 2022 04:46 PM

பாகிஸ்தான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்திருக்கிறது. மொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலும் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றதில்லை என சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.

First 2 wickets fall by stumping in Pakistan vs New zealand test

Also Read | Jo Mersa Marley: பாப் மார்லியின் பேரனும் புகழ்பெற்ற பாடகருமான ஜோ மெர்சா மார்லி மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பாகிஸ்தான் அணி சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதேபோல, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் பாகிஸ்தான் தொடரை இழந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் நியமிக்கப்பட்டார். அதேபோல, கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பில் இருந்தும் ரமீஸ் ராஜா மாற்றப்பட்டு நஜாம் செதி புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

First 2 wickets fall by stumping in Pakistan vs New zealand test

இந்நிலையில், நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி கடந்த 26 ஆம் தேதி கராச்சி மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷபிக் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர்.

ஆடுகளம் சுழல்பந்துக்கு சாதகமாக இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில் ஆரம்பத்திலேயே ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு கொடுக்க துவங்கினார் நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுத்தி. அது அந்த அணிக்கு கைகொடுத்தது. அஜாஸ் படேல் வீசிய ஓவரில் பாகிஸ்தான் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் ஸ்டம்பிங் மூலம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பிறகு, களத்திற்கு வந்த ஷான் மசூத் மைக்கேல் பிரேஸ்லெஸ் வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் ஸ்டம்பிங் மூலம் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

First 2 wickets fall by stumping in Pakistan vs New zealand test

அதாவது முதல் இரண்டு விக்கெட்களும் ஸ்டம்பிங் முறையில் எடுக்கப்பட்டன. மொத்த டெஸ்ட் வரலாற்றிலும் முதல் இரண்டு விக்கெட்டுகள் இப்படி ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும். 145 வருட டெஸ்ட் வரலாற்றில் ஆடவர் போட்டிகளில் முதன்முறையாக இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமே ஜமைக்காவில் கடந்த 1976 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போன்ற நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | உயிருக்கு போராடும் மீம்ஸ் நாயகன் சீம்ஸ்.. உரிமையாளரின் உருக்கமான பதிவு.. கலங்கிப்போன நெட்டிசன்கள்..!

Tags : #CRICKET #PAKISTAN VS NEW ZEALAND TEST #WICKETS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. First 2 wickets fall by stumping in Pakistan vs New zealand test | Sports News.