'சிறுத்தைய' விட செம பாஸ்ட்... டயர்டே ஆகாமல்... 'அடுத்த' தோனியை... வச்சு செய்யும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 12, 2019 09:13 PM

நேற்று நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை 2-1 என்ற விகிதத்தில் கைப்பற்றியது. ரோஹித், ராகுல், கோலி மூவரின் ரன் மழையால் மொத்தம் 20 ஓவர்களில் 240 ரன்களை இந்திய அணி குவித்தது. இதைப்பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

INDVsWI: Rishabh Pant trolled with hilarious memes

அதே நேரம் ரிஷப் பண்டை வச்சு செய்யவும் அவர்கள் தவறவில்லை. ஏனெனில் நேற்று கோலி தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுத்து பண்டை இறக்கி விட்டார். வெறும் 2 பந்துகள் மட்டுமே சந்தித்த பண்ட் பொல்லார்டு பந்துவீச்சில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். இதைப்பார்த்த ரசிகர்கள் மீம்ஸ் மழை பொழிந்து பாரபட்சம் பாராமல் அவரை வச்சு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து ரிஷப் பண்டுக்கு இந்திய அணியினர் வாய்ப்பு கொடுத்தாலும் அவர் மிகவும் எளிதான முறைகளில் தன்னுடைய விக்கெட்டை இழந்து விடுகிறார் என, ரசிகர்கள் நீண்ட காலமாகவே அவர்மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.