சிம்பிளான ரன்-அவுட்... ஒழுங்கா 'வீசத்' தெரியாதா?... இளம் வீரரை 'கெட்ட' வார்த்தையால் ஹிட்மேன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 18, 2019 11:09 PM

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா (159) ரன்களும், ராகுல் (102) ரன்களும் குவித்தனர். குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

Rohit abuses Pant for after missing simple run out dismissal

வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பந்தை சிம்பிளாக தட்டிவிட்டு ஓடி ரன் எடுத்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பந்தை பிடித்து வீசும்போது அது யாதவின் கைகளை விட்டு நழுவிச்சென்றது. இதனால் ஜேசன் ஹோல்டர் ரன் அவுட்டில் இருந்து தப்பித்தார். இதைப்பார்த்த ரோஹித் சர்மா பந்தை சரியாக பிடித்து வீசத்தெரியாதா? என்னும் வகையில் சைகை செய்து கெட்ட வார்த்தையால்  திட்டினார்.

போட்டியின் வர்ணனையாளர்களும் ரோஹித், பண்டை திட்டியது குறித்து பேசினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.