மீண்டும் டீமில் 'இடம்பிடித்த' வீரர்.. நீங்க பேசாம 'பிளைட்' புடிச்சு வந்துருங்க.. வறுக்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 11, 2019 07:07 PM

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் மும்பையில் தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

INDVsWI: West Indies won the toss and choose to field

இந்திய அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது. இதில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, சிவம் துபே, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் மற்றும் தீபக் சாஹர் இடம்பிடித்து உள்ளனர்.

முதலிரண்டு போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இந்த முறை அவருக்கு எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இம்முறையும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் நீங்கள் பிளைட் பிடித்து கேரளா வந்து பேசாமல் ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள் என ரசிகர்கள் அவருக்கு ஆலோசனை அளித்து வருகின்றனர்.

அதேநேரம் தொடர்நது சொதப்பி வரும் ரிஷப்பண்டுக்கு அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.