ஐபிஎல்லில் 'கேப்டன்களுக்கு' இணையான... 'சம்பளம்' வாங்கும் இளம்வீரர்... எவ்ளோ தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Dec 21, 2019 07:04 PM
ஐபிஎல் போட்டிகளில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய, வெளிநாட்டு வீரர்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் கேப்டன் கோலி 17 கோடி ரூபாயுடன் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். 12 ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் கோலி இந்திய அணியின் கேப்டனாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அடுத்த இடத்தை சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டெல்லி கேப்டன்ஸ் அணியின் இளம்வீரர் ரிஷப் பண்ட் ஆகியோர் 15 கோடியுடன் பிடித்துள்ளனர்.
12.50 கோடி சம்பளத்துடன் இவர்களுக்கு அடுத்த இடத்தை ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் வார்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் ஆகியோர் பிடித்துள்ளனர்.
Tags : #IPL #MSDHONI #RISHABHPANT #VIRATKOHLI
