"இது எப்டிங்க POSSIBLE??".. வலியுடன் ஓடி வந்த இளைஞர்.. எக்ஸ் ரே-யில் தெரிஞ்ச உண்மை.. "எப்படி வயித்துக்குள்ள போச்சுன்னே தெரிலயே"
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில தினங்களுக்கு முன்பாக, 27 வயது இளைஞர் ஒருவர் வயிற்று வலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

Also Read | "இதுக்கு நல்ல ஒரு பேரா வைங்கப்பா".. கேரளாவில் 'பப்பட சண்டை'.. கேப்ஷன் போட்டு கலக்கிய ஆனந்த் மஹிந்திரா!!
South 24 Parganas பகுதியை அடுத்த பர்த்தபிராட்டிமா என்னும் இடத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், வயிற்று வலி என அருகில் இருந்த மருத்துவமனையை நாடி உள்ளார்.
மேலும், வயிற்று வலி காரணமாக அந்த இளைஞர் கடும் அவதிக்கு உள்ளானதால் உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு எக்ஸ் ரே எடுத்து பார்க்க முடிவு செய்துள்ளனர்.
அப்படி எக்ஸ் ரே எடுத்து பார்த்த பின்னர் தான், வாலிபரின் கடும் வலிக்கு பின்னால் உள்ள அதிர்ச்சி காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. ஒரு பெரிய பாட்டில் ஒன்று வயிற்றிற்குள் இருப்பது தெரிய வந்த நிலையில், மொத்தம் 7.5 இன்ச் நீளமும் மூடியுடன் சேர்ந்து இருந்துள்ளது. இதன் பின்னர், இரண்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, வெற்றிகரமாக அந்த பாட்டிலை இளைஞரின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அகற்றினர்.
இதன் பின்னர், Deodorant பாட்டில் தான் வயிற்றிற்குள் இருந்தது என்பது தெரிய வந்த நிலையில், அவரின் உணவுக் குழல், குடல்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து அவர் சிகிச்சை பெற வேண்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், இத்தனை பெரிய Deodorant பாட்டில் எப்படி அவரது வயிற்றிற்குள் சென்றது என்பதற்கான காரணங்களும் சரி வர தெரியவில்லை என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
