CSK: புதிய பவுலிங் பயிற்சியாளராக பிராவோ.. பொறுப்பில் இருந்து விலகிய தமிழக வீரர் பாலாஜி! பின்னணி தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி காசி விசுவநாதன் கூறியதாவது, "பிராவோ ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சூப்பர் கிங்ஸ் குடும்பத்தில் ஒரு முக்கியமான உறுப்பினராக உள்ளார், மேலும் அவருடன் தொடர்ந்து பணியாற்ற நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்,. பிராவோவின் பரந்த அனுபவம் எங்கள் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு மகத்தான மதிப்பாக இருக்கும். அவரது வழிகாட்டுதலின் கீழ் எங்கள் பந்துவீச்சு குழு சிறப்பாக செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இது குறித்து பிராவோ கூறியுள்ளது, "நான் இந்த புதிய பயணத்தை எதிர்நோக்குகிறேன், ஏனென்றால் எனது விளையாடும் நாட்கள் முழுவதுமாக முடிந்த பிறகு நான் பயிற்சியாளராகிறேன்.பௌலர்களுடன் பணியாற்றுவதை நான் ரசிக்கிறேன், இது எனக்கு உற்சாகமான ஒரு ரோல். ஏனெனில் நான் விளையாடும் போது, நான் எப்போதும் பந்துவீச்சாளர்களுடன் செயல்பட்டுள்ளேன். பேட்ஸ்மேன்களை விட ஒரு படி மேலே இருப்பது எப்படி என்பது பற்றிய யோசனைகளில் சக பந்துவீச்சாளர்களுடன் ஆலோசித்துள்ளேன். ஒரே வித்தியாசம் என்னவென்றால், நான் இனி மிட்-ஆன் அல்லது மிட்-ஆஃபில் பீல்டிங் நிற்க மாட்டேன்! ஐபிஎல் வரலாற்றில் நான் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவே இல்லை. ஐபிஎல் வரலாற்றின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்!" என பிராவோ கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோ பொறுப்பேற்றுள்ள நிலையில் கடந்த சீசன் வரை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த எல் பாலாஜி, "தனிப்பட்ட காரணங்களுக்காக" ஒரு வருடம் ஓய்வில் இருக்க உள்ளார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பாலாஜியின் செயல்பாடுகள் தொடரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Bowling Boots 🆙
Coach Cap 🔛
Yours Yellovely, #SirChampion @DJBravo47 💛 pic.twitter.com/GkH2aDRkJ4
— Chennai Super Kings (@ChennaiIPL) December 2, 2022
Also Read | IPL போட்டிகளில் இருந்து ஓய்வு.. விடைபெற்றார் CSK ஆல் ரவுண்டர் பிராவோ! சகாப்தம் முடிந்தது