ELON MUSK : "இது லிஸ்ட்லயே இல்லையே.." மூளைக்குள் சிப் சோதனை.. குரங்குகளிடம் ஓவர்.. அடுத்து மனிதர்களிடம்.. எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்.!
முகப்பு > செய்திகள் > உலகம்சான் ப்ரான்சிஸ்கோ: உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க், உலகத் தொழில்நுட்ப வல்லுனர்களில் முன்னோடியாகவும் திகழ்கிறார்.
Also Read | விரைவில் கே எல் ராகுலுக்கு திருமணம்?.. வெளியான அசத்தல் தகவல்.. வைரல் ஆக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!!
அண்மையில் twitter உரிமையாளராக மாறிய எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றை ஏற்கனவே நடத்தி வருகிறார். தற்போது எலான் மஸ்கின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொழில்நுட்ப உலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை எப்போதுமே உருவாக்கி வருகிறது. அதன் அடுத்த அம்சமாக மனிதர்களின் மூளையில் சிப்பை பொருத்தி அதன் மூலம் கணினி உடன் நேரடியான உரையாடலை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரிசோதனையை விரைவில் தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.
மேலும் இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் நடத்தப்பட்டு அவை வெற்றி கரமாக முடிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் இந்த சோதனை மனிதர்களிடம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார் . நியூராலிங் என்கிற எலான் மஸ்கின் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலம் இந்த திட்டத்தின்படி மனிதர்களின் மீது சோதனை நடத்தப்படவிருக்கிறது. இதன் மூலம் மனிதர்களின் மனதில் நினைக்கிற விஷயங்களை கணினி வழியாக வெளிப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பில் பேசி உள்ள எலான் மஸ்க், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இது தொடர்பான ஆய்வறிக்கைகளை எழுத்து பூர்வமாக சமர்ப்பித்து விட்டதாகவும், சுமார் இன்னும் ஆறு மாத காலங்களுக்குள் மனிதர்களின் மீதான இந்த சோதனையை நியூராலிங் நிறுவனம் தொடங்கும் என்றும், மனிதர்கள் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்வதில் மிகவும் கவனமாக இருக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
நியூராலிங் சிப் என்று அழைக்கப்படும் இந்த சிப், ஒரு சிறிய நாணயத்தின் அளவை ஒத்ததாக இருக்கும் என்றும் குரங்குகளின் மண்டை ஓட்டில் இந்த சிப்பை பொருத்திய போது அவற்றால் சில அடிப்படை வீடியோ கேம்களை விளையாட முடிந்ததாகவும் கூறப்படும் , இதனை மனிதர்களுக்கு பொருத்தினால் பார்வை இழந்தவர்களும் பார்வை பெற முடியும் என்றும், நோய் பாதிப்பால் தசைகளை கூட அசைக்க முடியாதவர்கள் கூட இதன் மூலம், சாதாரண மனிதர்களை விட மிக வேகமாக மொபைல் போனை இயக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
தவிர தீவிர முதுகு தண்டுவட நோய், பார்கின்சன் உள்ளிட்ட நரம்பியல் நோய்கள் என பலவற்றிற்கும் இதன் மூலம் தீர்வு உண்டாகும் என்று கூறப்படுகிறது. இது மட்டும் சாத்தியமானால் நியூராலிங் பெரும் புரட்சி செய்யும் என்று அதனுடைய ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர். மூளையில் எந்த நியூரான் செயலிழந்ததோ அந்த குறிப்பிட்ட நியூரானை இந்த சிப் மூலம் தூண்டிவிட்டு வேலை செய்ய வைக்க முடியும் என்பது தான் இதனுடைய அடிப்படை என்று ஆராய்ச்சி குழுவினர் கூறியிருக்கின்றனர். எனவே இந்த நியூராலிங் சிப் என்பது தற்போது தொழில்நுட்ப உலகம் மற்றும் மருத்து உலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.