'ப்ரோ... ஆர்ம்ஸ் பாத்தீங்களா?.. பழனி படிக்கட்டு மாதிரி சிக்ஸ் பேக் பாடி'!.. 'நாங்க மட்டும் என்ன சும்மாவா?.. கெயிலுக்கு போட்டியாக ஜெர்சியை கழட்டிய சஹால்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கு இணையாக தன்னுடைய ஒல்லியான உடலை சட்டையை கழட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார், ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர் சஹால்.
![ipl rcb pbks chris gayle yuzvendra chahal jersey less post ipl rcb pbks chris gayle yuzvendra chahal jersey less post](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/ipl-rcb-pbks-chris-gayle-yuzvendra-chahal-jersey-less-post.jpg)
2021 ஐபிஎல் சீசனின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியில், பெங்களூர் அணி மிகவும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் பரிதாபமாக தோற்றது. இதனால் தொடர் தோல்விகளை சந்தித்த பஞ்சாப் அணி இப்போது உத்வேகம் பெற்றுள்ளது.
இந்தப் போட்டி முடிந்தப் பின்பு இரு அணி வீரர்களும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது கிறிஸ் கெயில் தன்னுடைய ஜெர்சியை கழட்டி கட்டுமஸ்தான உடலை காட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். இதனை பார்த்த சஹாலும் தன்னுடைய ஜெர்சியை கழட்டி போஸ் கொடுத்தார். இருவரும் பாடி பில்டர்களைப் போல போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமின்றி, இந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, "இந்த போட்டியைப் பற்றிய சுருக்கமான குறிப்பாக இந்த புகைப்படம் உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தது. அதாவது அதில் உடல் வலிமையானவராக கெயில் இருந்ததும், சஹால் ஒல்லியாக இருந்ததையும், நேற்றைய போட்டியில் பஞ்சாப் வென்றதோடு ஒப்பிட்டு போஸ்ட் செய்திருந்தது.
If we have to summarize #PBKSvRCB ⤵️#SaddaPunjab #PunjabKings #IPL2021 #PBKSvRCB pic.twitter.com/bplr9spBo9
— Punjab Kings (@PunjabKingsIPL) April 30, 2021
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)