இதோட 'ஸ்டாப்' பண்ணிட கூடாது..!. எட்டு வாரங்களுக்கு 'அத' பண்ணனும்...! 'அப்போ தான் கொரோனாவ கன்ட்ரோல் பண்ண முடியும்...' - ஐசிஎம்ஆர் அமைப்பின் தலைவர் வேண்டுகோள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸின் மரபணுவும் சற்று மாற்றம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் அந்த வைரஸின் தாக்கம் சென்ற வருடத்தை விட மிக கடுமையான பாதிப்புகளை மக்களின் உடலில் ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவின் சில மாநிலங்களில் மருத்துவமனை கட்டமைப்புகள் சரிவர இயங்க முடியாமலும், ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் அல்லோலப்பட்டு வருகின்றனர். இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, ஐசிஎம்ஆர் அமைப்பின் தலைவர் பல்ராம் பார்கவா இதுகுறித்து கூறும் போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்றுள்ளார்.
கொரோனா பரிசோதனை செய்தவர்களில் 10 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியாகும் மாவட்டங்களில் கண்டிப்பாக ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறிப்பிட்டத்தை வைத்து பார்த்தால் இந்தியாவில் 718 மாவட்டங்களில் நான்கில் மூன்று பங்கு மாவட்டங்களில் 10 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியாவதாக இருக்கிறது.
அதோடு 10 லிருந்து 5 சதவீதமாக தொற்று உறுதியாவது குறையும்போது தான் ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் பல்ராம் பார்கவா.