'கட்டுக்கடங்காத காளை... அவர ஏன்யா கட்டிப் போடுறீங்க'?.. ஆர்சிபி அணியின் டாப் ஆர்டரில் கை வைத்த கவாஸ்கர்!.. ஓப்பனிங் வீரர்கள் மாற்றமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர்சிபி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 22 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். அதன் படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர்.
இதில் ஏபி டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 75* ரன்கள் எடுத்தார். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து, இதனால் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஏபி டிவில்லியர்ஸை பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியதாவது, "ஏபி டிவில்லியர்ஸ் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினர். அவர் ஒரு ஜீனியஸ். ஏபி டிவில்லியர்ஸ் இப்படி அதிரடியாக விளையாடுவது தான் அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
20 ஓவர்கள் போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் ஆட்டத்தை பார்க்க எங்கு வேணாலும் செல்லலாம். ஏபி டிவில்லியர்ஸ் அடிக்கும் சிக்ஸர்களை பார்த்தால் மகிழ்ச்சி கிடைக்கும்" என்றும் கூறியுள்ளார்.
மேலும், 20 ஓவர்கள் போட்டியில் சில ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்யும் ஏபி டிவில்லியர்ஸ் ஓப்பனிங் இறங்கி ஆடினால் எப்படி இருக்கும் என்று ஒரு புதிரையும் போட்டுள்ளார். இதன் மூலம், ஆர்சிபி அணியின் டாப் ஆர்டரில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கவாஸ்கர் விரும்புகிறார்.