'என்ன நெனப்புல ஆடுறீங்க'?.. 'திரும்ப திரும்ப ஒரே தவறை செய்த படிக்கல்'!.. களத்திலேயே காண்டான கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வீரர் படிக்கல் ஆடிய விதம் கேப்டன் கோலியின் கோவத்தை கிளறியுள்ளது.
பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணியில் யாரும் சரியாக ஆடாத நிலையில் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு பெங்களூர் வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் நேற்று படிக்கல் ஆடிய விதம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. கடந்த சீசனில் நன்றாக ஆடிய படிக்கல் இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ஒரே ஒரு மேட்சை தவிர வேறு எந்த போட்டியிலும் படிக்கல் சரியாக ஆடவில்லை.
இந்த தொடரில் படிக்கல் தொடர்ந்து தவறான ஷாட்களை ஆடுகிறார். வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை மோசமாக சுற்றுகிறார். பந்தை சரியாக கணிக்க முடியாமல் திணறுகிறார். இதுதான் இந்த சீசனில் படிக்கல் சொதப்ப முக்கிய காரணமாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த சீசனில் படிக்கல் ஆடும் விதத்தை பார்த்து கோலியே கொஞ்சம் அதிர்ச்சியில்தான் இருக்கிறார். நேற்று போட்டியில் கூட படிக்கல் ஒவ்வொரு முறை பந்தை பார்க்காமல் பேட்டை சுற்றும் போதும், கோலி வெளிப்படையாக முகத்தில் கோபத்தை காட்டினார். குறிப்பாக, ரைலி மெரிடித் ஓவரில் தேவையின்றி படிக்கல் பேட்டை சுற்றினார்.
ரைலி மெரிடித் வீசிய 3வது ஓவரில் சிக்ஸ் அடித்த படிக்கல் அடுத்த பந்திலேயே பேட்டை சுற்றி போல்ட் ஆனார். இதை பார்த்து, என்ன ஷாட் இது என்பது போல கோலி முகத்தை சுளித்தார். இந்த தொடரில் படிக்கல் இப்படித்தான் பலமுறை அவுட் ஆனார். இனி வரும் போட்டிகளில் படிக்கல் தனது பேட்டிங் ஸ்டைலை கொஞ்சம் மாற்ற வேண்டும். முக்கியமாக ஃபுட் வொர்க்கில் கவனம் செலுத்த வேண்டும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.