'ஐபிஎல்' அணிக்குள் நுழைந்த 'கொரோனா'!.. 'முக்கிய' வீரர்களுக்கு உறுதியான தொற்று?.. ஒத்திவைக்கப்படும் இன்றைய 'போட்டி'?.
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் தற்போது 14 ஆவது ஐபிஎல் சீசன் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று கடைசியாக நடைபெற்றிருந்த போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அது மட்டுமில்லாமல், இந்த வெற்றியின் மூலம், டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கும் முன்னேறியது. இந்நிலையில், இன்றைய போட்டியில், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியும் மோதுவதாக இருந்தது.
ஆனால், இந்த போட்டி இன்று நடைபெறாமல், ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம், கொல்கத்தா அணி வீரர்களான வருண் சக்ரவர்த்தி (Varun Chakravarthy) மற்றும் சந்தீப் வாரியர் (Sandeep Warrier) ஆகிய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் தான் என்றும் கூறப்படுகிறது. ஐபிஎல் விளையாடும் வீரர்கள் கடுமையாக பயோ பபுள் விதியை கடைபிடித்து வந்த போதும், தொற்று உருவாகியுள்ளது.
சமீபத்தில், வருண் சக்ரவர்த்தி தனது தோள் பகுதியில் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டி, பயோ பபுள் விதிமுறைகளைத் தாண்டி வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதுவரை வெளியே இருந்த வீரர்களுக்கு, கொரோனா தொற்று உருவாகி வந்த நிலையில், இன்று பயோ பபுள் இருக்கும் வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.