நீங்க சாதாரண விக்கெட்லாம் எடுக்க மாட்டீங்களா?.. எடுத்தா பெரிய ஆளுக விக்கெட்டு தானா?.. கோலியை காலி செய்த இளம் வீரரின்... மாஸ் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலியின் முக்கியமான விக்கெட்டை எடுத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளார் டெல்லியின் இளம் பௌலர்.
ஐபிஎல் 2021 தொடரின் 23வது போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய நிலையில், வெற்றிக்கான தீவிரத்தில் இரு அணிகளும் காணப்பட்டன. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுதது பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் சொதப்பினர். பவர்ப்ளேவில் அந்த அணி வெறும் 36 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. ஆனால், தொடர்ந்து வந்த பட்டிதார் மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை சிறப்பாக உயர்த்தினர்.
அதைத் தொடர்ந்து, அணியின் ஸ்கோர் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171ஆக இருந்தது. அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. பெரிய மைதானமான அதில் டீ வில்லியர்ஸ் 5 சிக்ஸ்கள் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்திருந்தார்.
குறிப்பாக இறுதி ஓவரில் 3 சிகஸ்களை டீ வில்லியர்ஸ் அடித்திருந்தார். இறுதி ஓவரில் 23 ரன்களை அந்த அணி அடித்திருந்தது. 42 பந்துகளில் 75 ரன்களை அடித்துள்ளார் டீ வில்லியர்ஸ். மேலும், இந்த போட்டியில் 5000 ஐபிஎல் ரன்களையும் அவர் பூர்த்தி செய்துள்ளார்.
இதற்கிடையே, இந்த போட்டியின் 4வது ஓவரில் விராட் கோலி ஸ்டிரைக்கில் இருக்கும் போது ஆவேஷ் கான் பந்து வீசினார். சரியான மீடியம் பாலை வீசியதும், அதனை விராட் கோலி ஆஃப் சைடில் அடிக்க முயன்றார். ஆனால், அந்த பந்து inside edge ஆனது. நேராக ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது. ஆவேஷ் கான் தொடர்ந்து முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம், இப்போது அவர்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் டிரெண்டிங்கில் உள்ளார்.
முன்னதாக சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் தோனியின் விக்கெட்டையும் அவர் வீழ்த்தியுள்ளார். மேலும் இந்த தொடரில் அவர் இதுவரை 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.