'நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்... உனக்கு பந்து வீச மாட்டேன்!'.. 'என்ன கேப்டன்னு கூட பார்க்காம.. பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு'?.. ஜாமிசன் அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர்சிபி அணியின் பவுலர் கைல் ஜேமிசன் கேப்டன் விராட் கோலிக்கு பந்துவீச மறுத்ததாக தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து இளம் பௌலர் கைல் ஜேமிசன் இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகின்றனர். இத்தொடர் முடிந்த பிறகு இந்தியா, நியூசிலாந்து இடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷப் தொடருக்கான இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பயிற்சியின்போது விராட் கோலி, கைல் ஜேமிசன் இருவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பாக பேசிக்கொண்டிருந்ததாகவும், அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிற்குப் பயன்படுத்தப்படும் டியுக்ஸ் பந்தில் எனக்கு பௌலிங் போடுமாறு விராட் கோலி, ஜேமிசனிடம் கோரிக்கை விடுத்ததாகவும், ஆர்சிபி ஆல்-ரவுண்டர் டேன் கிறிஸ்டியன் கூறியுள்ளார்.
விராட் கோலியின் கோரிக்கையும் நிராகரிக்கும் வகையில், "உங்களுக்கு என்னால் பந்து வீச முடியாது. இப்போது முடியவே முடியாது" என்று திட்டவட்டமாக ஜேமிசன் கூறியுள்ளார். இதைப் பற்றி குறிப்பிட்ட கிறிஸ்டியன், "டியூக் பந்தில் ஜாமிசன் வீசம் போது, அவருடைய ரிலீஸ் பாயின்ட்டை கோலி கண்டுபிடித்துவிட்டால், அடுத்து வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போது, அதற்கு எதிராக கோலி வியூகம் வகுத்துவிடுவோரோ என்று கூட ஜாமிசன் சிந்தித்து இருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய கிறிஸ்டியன், எங்கள் அணி தற்போது பலமானதாக இருக்கிறது. கடந்த சீசன்களைவிட தற்போது அணி வலுவாக உள்ளது. டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் போன்றவர்கள் அதிரடியாக விளையாடி வருவதால், இந்த வருடம் நிச்சயம் கோப்பையை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் கைல் ஜேமிசனை ஆர்சிபி 15 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களை இவர் திணறடித்ததால்தான் ஐபிஎல் ஏலத்தில் இவருக்கு மவுசு கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.