பிரபல 'ஐபிஎல்' அணி குறித்து.. லைவ் 'வீடியோ'வில் ராஷ்மிகா கூறிய 'விஷயம்'.. வேற லெவலில் வைரலாக்கிய 'நெட்டிசன்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), 'கீதா கோவிந்தம்' என்ற திரைப்படம் மூலம், இந்தியா முழுவதும் புகழ் பெற்றிருந்தார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா உடனான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்த நிலையில், ராஷ்மிகாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதன் பிறகு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட வேறு மொழி திரைப்படங்களிலும் ராஷ்மிகா மந்தனா தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் லைவ் வீடியோவில், ராஷ்மிகா கூறிய விஷயம் ஒன்று, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
லைவ் வீடியோவில் ராஷ்மிகா இருந்த போது, ரசிகர் ஒருவர் அவரிடம், 'உங்களின் பேவரைட் ஐபிஎல் அணி எது?' என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, 'ஈ சாலா கப் நம்தே' என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் ஸ்லோகனை குறிப்பிட்டார். இதனால், ஆர்சிபி அணியின் ரசிகர்கள், வேற லெவல் ஆனந்தத்தில் உள்ளனர்.
கோலி தலைமையிலான பெங்களூர் அணி, இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியதில்லை. இருந்த போதும், கோலி அண்ட் கோவிற்கு அந்த அணியின் ரசிகர்கள், தொடர்ந்து மிகப் பெரிய ஆதரவாக இருந்து, அணியை சிறப்பாக ஊக்குவித்து வருகின்றனர்.
A fan asked #RashmikaMandanna about her favorite team in #ipl ☺
She replied : " EE sala cup namde"#rcb #playbold #cskchampion2021 #IPL2021 #ViratKohli #RCBvsDC pic.twitter.com/6GOzDywyqo
— Pratik (@Pratik21144947) April 27, 2021
இந்த சீசனில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும், ஆர்சிபி கருதப்படும் நிலையில், பிரபல நடிகையான ராஷ்மிகாவின் பதிலும், பெங்களூர் ரசிகர்கள் மத்தியில், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
